திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்பதே மில்லியன் டாலர் கேள்விதான் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் இன்று (பிப்., 25) செய்தியாளர்களை சந்தித்த அவர், 'திமுகவை எதிர்ப்பதற்காகவே கட்சியைத் துவங்கி, பல ஆண்டுகளாக எதிர்த்து அரசியல் செய்த எம்.ஜி.ஆரின் ஆசி திமுகவுக்குக் கிடைக்கும் என, ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூறுவது நகைப்புக்குரியது. இது மனவேதனையைத் தருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமாக உள்ளது' என்று தெரிவித்தார்.