தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற 15-வது சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றதுடன், 6.47%வாக்குகளையும் பெற்றது. அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 2016-ம் ஆண்டை விட 10 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபித்தது. இதை காரணமாக வைத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகளை காங்கிரஸ் தரப்பு கோரியுள்ளது.