மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் தனித்து களமிறங்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. தேர்தல் பணிகள், தற்போதைய அரசியல் சூழல் குறித்து இன்று (பிப்., 05) டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் என பலமுனைப்போட்டிக்கு அம்மாநிலம் தயாராகி வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணியில் உள்ளது. கேரளாவில் காங்கிரஸ், இடதுசாரிகள் எதிரெதிர் துருவங்களாக போட்டியிடுகின்றன.