தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் குடியரசு தின தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (ஜன.5) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், தமிழக மக்களுக்கும் ஆளுநர் தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஆளுநரின் செயல்பாடுகள் மாநில நலனுக்கு எதிராக இருப்பதால், இந்த விருந்தில் பங்கேற்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
நன்றி:News18