தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய்யை பனையூர் இல்லத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் நேரில் சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கினர். இதனால் விஜய்யின் பலம் 113 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, பனையூரில் காரில் புறப்பட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் காங்கிரஸ் ஆதரவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் புன்னகைத்தபடி 'வணக்கம், நன்றி' என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றார். மெஜாரிட்டிக்கு இன்னும் 5 இடங்களே தேவைப்படும் நிலையில், பாமக-வின் அடுத்தகட்ட நகர்வு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.