தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆதரவு கோரி அதிமுகவுடன் தவெக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதால், காங்கிரஸ் கட்சி தனது செய்தியாளர்கள் சந்திப்பை திடீரென தள்ளிவைத்துள்ளது. காலை 11 மணிக்கே கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்பதாக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்திருந்த நிலையில், தற்போதைய அரசியல் சூழலால் அது மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.