தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் என தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இன்று (பிப்.17) கருத்து தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், "காங்கிரஸ் இந்த கோரிக்கை வைக்கிறது என்றால், அது அவர்கள் உரிமை. இது கூட்டணிக்குள் பேசி முடிக்கப்படும். இந்த கருத்தால் கூட்டணி சிதையும் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அது எப்போதும் நடக்காது" என தெரிவித்துள்ளார்.
நன்ற:SunNews