கர்நாடகாவில் அமைச்சரவை மாற்றம் கோரி 30-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் MLA-க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரியாக செயல்படாத அமைச்சர்களை நீக்கிவிட்டு தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், 2028 தேர்தலை முன்னிட்டு முதல்வர் மாற்றத்தை வலியுறுத்தியும் அவர்கள் மேலிடத்திடம் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த திடீர் அரசியல் நகர்வால் தற்போதைய அமைச்சர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியும், குழப்பமும் நிலவுகிறது.