திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், பயன்படுத்தப்பட்ட கருத்துகளும் கடும் கண்டனத்திற்குரியவை எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மீது முன்வைக்கப்பட்டுள்ள "துரோகம்", "முதுகில் குத்துதல்" போன்ற குற்றச்சாட்டுகளைத் தமிழ்நாடு காங்கிரஸ் முழுமையாக நிராகரிப்பதாகவும், இத்தகைய விமர்சனங்கள் ஏற்புடையதல்ல என்றும் அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.