புதுச்சேரியில் காங்கிரஸ் தோல்விக்குக் கூட்டணி குழப்பமே காரணம் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஒப்புக்கொண்டார். மேலும், புதுச்சேரியில் அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப்போவதாகக் குற்றம் சாட்டிய அவர், இதுபற்றி முதல்வர் ரங்கசாமி விளக்கமளிக்கக் கோரினார். தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் தவெக-காங்கிரஸ் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, அகில இந்திய தலைமையுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் பதிலளித்தார்.