தனித்துப் போட்டியிடும் விஜய்க்கு வாழ்த்துகள்: கனிமொழி

தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்திருக்கும் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, "தவெக தனித்துப் போட்டியிடுவதால் திமுகவுக்கு சவால் இல்லை. அதிமுக-தவெகவுக்கு சவாலாக இருக்கலாம். திமுக மீதும், முதல்வர் மீதும் மக்கள் மிகப்பெரிய நம்பிக்கையோடு இருக்கிறார்கள். மக்கள் யாரை, எப்படி பார்க்கிறார்கள் என்பதுதான் முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: News18 Tamil Nadu -

தொடர்புடைய செய்தி