தவெக தலைவர் விஜயின் அரசியல் பயணத்திற்கு, இயக்குநர் மாரி செல்வராஜ் வாழ்த்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “விஜய் சாரின் சினிமா மீது பிரியம் உண்டு. நான் சினிமா நோக்கி நகர அவரும் ஒரு காரணம். ஒரு ரசிகனா விஜயை எனக்கு பிடிக்கும். அவரின் அரசியல் நிலைப்பாடு முழுமையாக வெளிப்படும் போது புரிந்து கொள்ள முடியும். யார் வேணும் என்றாலும் அரசியலுக்கு வந்து நல்லது செய்யலாம். அதை நாம் வரவேற்கத்தான் செய்ய வேண்டும். அதற்கு வாழ்த்துக்கள் சொல்லலாம்” என்றார்.
நன்றி: PT