தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வு எழுத உள்ள 11 மற்றும் 12ஆம் வகுப்பைச் சேர்ந்த அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுத் தேர்வினைத் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தேர்வில் வெற்றிப் பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.