தீண்டாமை கொடுமை: அரசுப் பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவிகள் காயம்

புதுக்கோட்டை ரங்கமாசத்திரம் பகுதியில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் அரசு பேருந்தில் பயணிக்க பிற சமூக பயணிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி கதவை திறந்துள்ளார். இதில் கீழே விழுந்து காயமடை 10 மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் குழந்தைகளுக்கு பல மாதங்களாகவே இந்த தீண்டாமை நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நன்றி: Sun

தொடர்புடைய செய்தி