இந்தியாவில் நடப்பு ஆண்டு காதலர் தின வாரத்தில் (பிப். 7-14), ஸ்விக்கி, இன்ஸ்டாமார்ட் தளத்தில் பூக்களை விட ஆணுறைகள் மற்றும் பாலியல் சார்ந்த தயாரிப்புகளே அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. குயிக் காமர்ஸ் அறிக்கையின்படி, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் டெல்லி போன்ற பெருநகரங்கள் இந்த வரிசையில் முன்னிலை வகிக்கின்றன. வழக்கமாக அதிகம் விற்பனையாகும் சாக்லேட்கள் மற்றும் டெட்டி பொம்மைகளை விடவும் இத்தகைய தயாரிப்புகளுக்கே மக்கள் முன்னுரிமை அளித்துள்ளனர்.