ஈரான் போரால் மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து பாதிப்பால், உலகின் மிகப்பெரிய ஆணுறை தயாரிப்பு நிறுவனமான 'கரெக்ஸ்' விலையை 30% உயர்த்தியுள்ளது. நைட்ரைல், ரப்பர் பற்றாக்குறையால் உற்பத்தி முடங்கும் அபாயம் உள்ளதாக மலேசியாவைச் சேர்ந்த இந்நிறுவனம் எச்சரித்துள்ளது. இதனால் முன்னணி பிராண்டுகளின் விலை ஏறுவதுடன், உலகளாவிய சுகாதார மற்றும் குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.