"நலம் காக்கும் ஸ்டாலின்" எனும் இலவச முழு உடல் பரிசோதனை திட்டத்தை வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் முகாம்கள் நடைபெறும். முகாம்களிலேயே பரிசோதனை முடிவுகள் SMS வாயிலாகப் பயனாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.