காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகாவில் இன்று (ஆக., 13) முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஒசூர் எல்லையிலேயே நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓசூரில் இருந்து கர்நாடகாவுக்கும், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் குறைவான எண்ணிக்கையிலேயே பயணிகள் உள்ளனர். அதே போல், சத்தியமங்கலம் வழியாக இயங்கும் 14 தமிழக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.
நன்றி: News18