கீழடி அகழாய்வில் முழுமையான வட்டப்பானை கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ம் கட்ட அகழாய்வில், கஜேந்திரனின் நிலத்தில் தோண்டப்பட்ட குழியிலிருந்து சிறிய வடிவிலான முழுமையான வட்டப்பானை, உடைந்த சாயக்கிண்ணங்கள் மற்றும் இருவண்ண சுடுமண் பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முன்னதாக 5-ம் கட்ட அகழாய்வில் சேதமடைந்த நிலையில் வட்டப்பானை கிடைத்திருந்த சூழலில், தற்போது முழுமையான பானை கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி