அனுமதி இன்றிப் பிரச்சாரம் செய்த திமுகவினர் மீது தவெக புகார்

திருச்செங்கோட்டில் முறைப்படி அனுமதி பெற்று பரப்புரை செய்த தவெக வேட்பாளரை, திமுகவினர் அத்துமீறி தடுத்ததாக தவெக நிர்வாகி அருண்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறை, அனுமதியின்றி பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வாகனத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தது. களத்தில் தங்களை எதிர்கொள்ள முடியாமல் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், இதற்கு தேர்தல் முடிவில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி