நாகப்பட்டினத்தில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.4500க்கு விற்பதாக புகார்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிலவும் கடுமையான வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாட்டால் பல்வேறு உணவகங்கள் மற்றும் டீ கடைகள் மூடப்பட்டுள்ளன. வழக்கமாக ரூ.1,800-க்கு விற்கப்படும் வணிக சிலிண்டர்கள், தற்போது ரூ.4,000 முதல் ரூ.4,500 வரை விற்கப்படுவதாகப் பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இப்பிரச்னை குறித்து அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி