மெட்டா நிறுவனம் தனது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் போலி செய்திகளை தடுக்க, X தளத்தை பின்பற்றி 'கம்யூனிட்டி நோட்ஸ்' முறையை அறிமுகம் செய்யவுள்ளது. இதற்காக தகவல் சரிபார்ப்பு நிறுவனங்களுக்கான நிதியை 50% குறைத்துள்ள மெட்டா, இனி தகுதியுள்ள பயனாளர்களே செய்திகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் அதிகாரத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் பங்களிப்புடன் தகவல் சரிபார்ப்பு பணி வெளிப்படையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.