ஜனநாயக அரசியலில் கம்யூனிச சித்தாந்தம் இப்போது இல்லை என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலத்தின் வளர்ச்சி குறித்த மாநாட்டில் இன்று (பிப்., 08) பேசிய அவர், கம்யூனிச சித்தாந்தத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். இடதுசாரி தீவிரவாதம் ஒரு சித்தாந்த சவால் என்றும், கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் இருந்த இடங்களில் வளர்ச்சி இல்லை என்றும் அவர் கூறினார். திரிபுரா, மேற்குவங்கம், கேரளாவில் அதன் நிலைமை குறித்தும் அவர் குறிப்பிட்டார்.