சென்னை தலைமைச் செயலகம் முன்பு பெண் ஒருவர் உடலில் டீசலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்ற அந்தப் பெண், முதலமைச்சரின் தனிப்பிரிவில் தான் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: சன் நியூஸ்