கோவை மாநகரில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. வணிக ரீதியாக இயங்கும் தெருவோர தேநீர் கடைகள் தொடங்கி, நடுத்தர உணவகங்கள், உயர் தர உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வரை கேஸ் சிலிண்டர் அத்தியாவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. வணிக சிலிண்டருக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், வெளிச்சந்தையில் முறைகேடாக விற்கப்படும் சிலிண்டரின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி வணிக சிலிண்டர் ரூ.7,000க்கு விற்பனை செய்யப்படுவதாக வணிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.