தமிழ்நாட்டில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.46 உயர்ந்து, ரூ.3,283-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. வணிக சிலிண்டர் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ள அதேவேளையில், பொதுமக்களுக்கு நிம்மதியளிக்கும் விதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவொரு மாற்றமும் இன்றி பழைய விலையிலேயே நீடிக்கிறது.
நன்றி: நியூஸ் தமிழ்