வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.25 குறைக்கப்பட்டுள்ளது. நேற்று வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ.1,906-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று குறைந்தது. ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி விலை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்றும் (ஜூன் 1) சிலிண்டர் விலையில் ரூ.25 குறைக்கப்பட்டு சென்னையில் ரூ.1881-க்கு விற்கப்படுகிறது. டெல்லியில் ரூ.1,723 விற்பனையாகிறது. வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் மாற்றமில்லை.