சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு இன்றுடன் (மே.27) முடிவுக்கு வந்தது. இபிஎஸ்-க்கு எதிராக வேலுமணி தரப்பு தற்போது ஒன்றிணைந்துவிட்டது. இதனை உறுதிபடுத்தும் விதமாக அதிமுக ஐடி விங் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது. இனி நமக்குள் பிரிவில்லை, இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை. கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.