தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 426 கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல் உள்ளிட்ட 29 பாடப்பிரிவுகளில் தற்காலிக அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த நியமனத்திற்கு, 57 வயதிற்கு உட்பட்ட தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் www.tngasa.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.