கோவை: பொள்ளாச்சி அருகே ஒருதலை காதல் விவகாரத்தில் வீடு புகுந்து கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடுகபாளையம் பகுதியில் வீட்டில் தனியே இருந்த அஸ்விதா (19) என்பவரை பிரவீன் குமார் என்ற இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார். அஸ்விதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கெனவே இறந்தது தெரிய வந்தது.