கடலூரில் இடி தாக்கி கல்லூரி மாணவர் பலி.. இருவர் காயம்

கடலூர் தேவனாம்பட்டினம் அருகே பெரியார் ஆர்ட்ஸ் கல்லூரியில் நேற்று (மே.14) மாலை ஹரிகரன் என்ற மாணவர், செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது இடி தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இடியின் தாக்கத்தால் மற்ற இரு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி