கோயம்புத்தூரில், ஆண் நண்பருடன் இருந்த கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் விமான நிலையத்தின் பின்புறம், கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு சென்ற 3 இளைஞர்கள், ஆண் நண்பரை தாக்கி, மாணவியை வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், தப்பியோடிய 3 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைத்துள்ளனர்.