ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தபூர் அருகே உள்ள நாராயணா கல்லூரியில் படித்து வந்த மாணவர் சரண். இவர், வகுப்பறையில் அமர்ந்து இருந்த நிலையில் திடீரென அறையைவிட்டு வெளியே சென்று, மூன்றாவது மாடி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து பதறிப்போன சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாணவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: TeluguScribe