உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில், கல்லூரி மாணவ, மாணவி இருவர் காணாமல் போன நிலையில், மரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போனது தொடர்பாக காவல்துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்தி வந்த சூழலில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாணவியின் ஆடையில் ரத்தக் கறைகள் இருந்ததால், இருவரையும் அடித்துக் கொன்றுவிட்டு தூக்கிலிட்டிருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.