இடிந்து விழுந்த கட்டிடப் பகுதி: மயிரிழையில் உயிர் தப்பிய வாலிபர்

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுதாமா மார்க்கெட்டில் ஸ்கூட்டரில் அமர்ந்து செல்போன் பார்த்து கொண்டிருந்த வாலிபர் மீது, கட்டிடத்தின் மேல் பகுதி இடிந்து விழுந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜி.எம்.ஓ.யு (GMOU) வளாக பகுதியில் நடைபெற்ற இந்த விபத்தில், கட்டிடத்தின் இடிபாடுகள் வாலிபரின் மிக அருகே விழுந்த போதிலும், அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். இச்சம்பவம் தொடர்பாக வெளியான பதறவைக்கும் காட்சிகள், தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕