ஆனால் இந்த ஆண்டு, வழக்கத்திற்கு மாறான இதமான காலநிலை நிலவி வருவதால், சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, மார்ச் மாத இறுதி வாரத்திலிருந்து வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தொடங்கி, திங்கட்கிழமை காலை வரை சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதை, எஸ்டேட் சாலைகள் என எங்கு பார்த்தாலும் அணிவகுத்து நிற்கின்றன.