வால்பாறை செங்குத்துப்பாறை டிவிஷன் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை தேயிலை பறித்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் ஆனந்தன் (40) படுகாயமடைந்தார். அங்கிருந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.