அப்போதுதான் அதிர்ச்சியான காட்சி பதிவாகியிருந்தது. வீட்டின் அருகே புதர் மறைவில் பதுங்கியிருந்த பெரிய சிறுத்தை ஒன்று, நாய்கள் குரைத்த சத்தம் கேட்டு ஆத்திரமடைந்து சிறுவனை நோக்கி பாய்ந்தது. ஆனால், நாய்களின் தொடர் குரைப்பால் நிலை தடுமாறிய சிறுத்தை, உடனடியாக அங்கிருந்து திரும்பிச் சென்றது. இந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் வந்தது குறித்து அச்சம் தெரிவித்துள்ள மக்கள், வனத்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு சிறுத்தை ஊருக்குள் நுழைவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு