கோவை: வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது

கோவை உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த சேக் முகமது (26) என்பவரை முன்விரோதத்தில் கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அக்பர்அலி (43), மைதீன் பாஷா (25), அசாருதீன் (36) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். படுகாயமடைந்த சேக் முகமது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடைவீதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி