அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த உயர் அழுத்த மின்சார கம்பியில் உராய்ந்ததில் மின்சாரம் பாய்ந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீசார், தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் இளங்கோவை மீட்டு பொள்ளாச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.