சூலூர் அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சூலூர் பழைய பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சக்திவேல் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்களை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.