மேட்டுப்பாளையம்: லாரி மோதியதில் முதியவர் பலி!

மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் மாதையன் லேஅவுட் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (95) நேற்று நெல்லித்துறை ரோடு என். சி. எம். எஸ். கிழங்கு மண்டி அருகே நடந்து சென்றபோது, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த வினோத் குமார் (28) ஓட்டி வந்த லாரி பின்னோக்கி வந்து அவர் மீது மோதியது. இதில் ராமசாமி படுகாயமடைந்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி