கோவை கணபதி பராசக்திநகர் மெயின் ரோட்டில் நேற்று மதியம் திடீரென சுமார் 8 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த 20-வது வார்டு கவுன்சிலர் மரியராஜ் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார். பாதாள சாக்கடைப் பகுதியில் சாலை அடர்த்தி குறைந்ததால் பள்ளம் உருவானது தெரியவந்தது. அங்கு தண்ணீர் ஓடும் நிலையில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் கவுன்சிலர் தடுப்புகள் அமைத்தார். பின்னர் மாநகராட்சி அதிகாரிகளிடம் சாலை உடனடி சீரமைப்பு செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.