கோவை: காதலித்து ஏமாற்றிய வழக்கில் வாலிபர் கைது

கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த 21 வயது மகள் கடந்த வாரம் திடீரென மாயமானார். இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் ஆத்துப்பாலத்தைச் சேர்ந்த ரபீக் ஆசை வார்த்தைகளால் இளம்பெண்ணை அழைத்துச் சென்றது தெரியவந்தது. விசாரணைக்காக அழைக்கப்பட்ட ரபீக், பின்னர் மகளைக் வீட்டிற்கு அழைத்துச் சென்றதும், புகாரை திரும்பப் பெறச் சொல்லி சத்தியபாமாவுடன் தகராறு செய்ததும், அவளை திட்டி, தாக்கியது பற்றியும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ரபீக்கை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், பல பெண்களை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், கரும்புக்கடை காவல் நிலையத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் அவர் நேற்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

தொடர்புடைய செய்தி