கோவை: வியாபாரி மீது மது பாட்டில் தாக்கு.. வாலிபர் கைது

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் எஸ். எம். நகர் பகுதியில், பாத்திர வியாபாரியான மோகன் (26) மீது, பரமசிவம் (23) என்ற வாலிபர் மதுபாட்டிலால் தாக்குதல் நடத்தினார். மது கேட்பதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, பரமசிவம் குடிபோதையில் ஆத்திரம் கொண்டு தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த மோகன் போலீசில் புகார் அளித்ததையடுத்து, மேட்டுப்பாளையம் போலீசார் பரமசிவத்தை நேற்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்ற வருகிறது.

தொடர்புடைய செய்தி