கோவை: இளம்பெண் மர்மச்சாவு – காதலனிடம் விசாரணை

கோவை கவுண்டம்பாளையம் அருகே இடையர்பாளையம் ஆட்டோநகரைச் சேர்ந்த சந்தியா (25) என்ற இளம்பெண் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலன் ஆஷிக் (29) உடனான தகராறு காரணமாக சந்தியா தற்கொலை செய்து கொண்டதாக ஆஷிக் தெரிவித்துள்ளார். எனினும், சந்தியாவின் உடலில் காயங்கள் மற்றும் தழும்புகள் இருந்ததால் மர்மச்சாவு என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலன் ஆஷிக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி