நிகழ்ச்சியில் உடற்பயிற்சி, யோகா, முதலுதவி சிகிச்சை அளித்தல் போன்ற பயிற்சிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், பம்பரம், ஸ்கிப்பிங், டயர் ஓட்டுதல், காகித ராக்கெட், பரமபதம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும், ஃபேஸ் பெயிண்டிங், 360° கேமரா போன்ற நவீன பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றிருந்தன. பலரும் இந்த விளையாட்டுகளில் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பார்வையாளர்கள் உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சி கோவை மாநகராட்சி மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. உலக மகிழ்ச்சி தினத்தை கொண்டாடும் வகையில், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.