உறவினர்கள் என்பதால் அவர்களை நம்பிய புவியரசு, 2023 ஆம் ஆண்டு முதல் தவணையாக ரூ. 4.90 லட்சம் முதலீடு செய்தார். அதன் பிறகு பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ. 1.64 கோடி முதலீடு செய்துள்ளார். திடீரென பணம் தேவைப்பட்டதால், புவியரசு தனது முதலீட்டை திரும்பக் கேட்டபோது, ரம்யா மற்றும் அவரது குடும்பத்தினர் பணத்தைத் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தியுள்ளனர். பின்னர், பணத்தைத் தர மறுத்து புவியரசுவை மிரட்டியுள்ளனர். இது குறித்து புவியரசு மாவட்ட கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ரம்யாவை நேற்று கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர்
கோவை: ஆவாரம்பாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்