வழக்கம் போல் நேற்று (ஜூன் 10) பொள்ளாச்சியில் இருந்து நவமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து குரங்கு நீர்வீழ்ச்சியைக் கடந்து சென்றபோது, சாலையோரத்தில் குட்டியுடன் நின்றிருந்த யானைக் கூட்டத்தில் இருந்து ஒரு பெண் யானை திடீரென பேருந்தை துரத்தத் தொடங்கியது.
யானை துரத்தியதால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் சத்தம் போட்டனர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர், பேருந்தை வேகமாக அங்கிருந்து ஓட்டிச் சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நவமலைக்கு வாகனங்கள் செல்வதற்கு வனத்துறையினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.