கோவை: தி. மு. க. வை கடுமையாக விமர்சித்த வானதி சீனிவாசன்

பா. ஜ. க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த தமிழ்நாட்டில் வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு நிறைவை அரசு கொண்டாடாதது வருத்தம் அளிக்கிறது என்றார். மேலும், தி. மு. க. வினர் அதிகாரிகள் இடமிருந்து வாக்காளர் விண்ணப்பங்களைப் பெறுவது குற்றம் என்றும், அனைத்துக் கட்சிகளையும் தட்டிப் பார்க்கலாம் என நினைக்கும் தி. மு. க. வினர், திருப்பி அடிக்கத் தெரியும் என்பதையும் உணர வேண்டும் என்றும் எச்சரித்தார். அ. தி. மு. க - பா. ஜ. க கூட்டணி குறித்து மத்திய தலைமையின் வழிகாட்டுதலின்படி செயல்படுவதாகவும், நடிகர் விஜய் அரசியல் குறித்து கேள்வி எழுப்பிய அவர், தி. மு. க. வை வீழ்த்துவோம் என கூறும் விஜய், அதற்கான திட்டம் வைத்துள்ளாரா என்பதை கூற வேண்டும் என சவால் விடுத்தார்.

தொடர்புடைய செய்தி